Ministry of human
resource development
இந்தியாவில் கல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாட்டு அமைச்சரவையின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனித வள மேம்பாட்டு அமைச்சரவை இந்திய அரசாங்கத்தால் 1945 ம் வருடத்திற்கு பிறகு தன தனி அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பானது சுதந்திரத்திற்கு பிறகு தனிப்பெரும் அமைப்பாக உருவெடுத்தது. 1957 ல் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யும் அமைப்பாக உருவெடுத்தது. இந்த அமைச்சரவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அவை.
கல்வி அமைச்சரவை
அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரவை
இந்த இரு அமைப்பும் இரு தனித் தனி மந்திரிகளின் தலைமையில் நடைபெறுகிறது. மீண்டும் 1963 இல் இந்த இரண்டு அமைச்சரவையும் ஒன்று செர்கபட்டு பின்பு இரண்டு துறைகள் உருவாக்கப்பட்டது அவை, கல்வித்துறை மற்றும் அறிவியல் துறை ஆகும். மேலும் அமைச்சரவையின் வளர்ச்சி கருதி 1964-65 வருடத்தில் ஐந்து துறைகளாகப் பிரிக்கப்பட்டது. அவை: பள்ளிகல்வி, மேல்நிலைக்கல்வி, உதவித்தொகை வழங்கும் துறை, திட்டம் மற்றும் துணைகல்வி மற்றும், மொழி மற்றும் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்துறை. இது மேலும் நான்கு துனைத்துறைகளாக பிரிக்கப்பட்டது. அவை: உடற்பயிற்சி, மனமகிழ்வு, வெளிவுறவுத்துறை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை, இவை அனைத்தும் தனித்தனித்துறைகளாக செயல்படுகின்றன.
1966-68 இல் இந்த அமைச்சரவை மேலும் ஏழு அமைப்பாக பிரிக்கப்பட்டது அவை: கலைநிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டதுறை, திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், மேலாண்மை, பொதுக்கல்வி, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி, உதவித்தொகை மற்றும் இளைஞர் பணிக்குலுமங்கள் மற்றும் மொழி மற்றும் மற்றும் புத்தக மேம்பாட்டுதுறை.
தற்கால சமுதாயத்தில் ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி உடலியற்குறு வளர்ச்சியை சார்துள்ளது. கல்வி வளர்ச்சியானது மனித வளத்தை சார்ந்துள்ளது. இதனால் கல்வி அமைச்சரவை செப்டம்பர் 26,1985
இல் மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையாக மாற்றப்பட்டது. இது ஐந்து துறைகளை கொண்டது. அவை: கல்வித்துறை, கலாச்சாரத்துறை, கலைத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் சார்ந்த துறை, பெண்கள்நலத்துறை.
No comments:
Post a Comment